/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருவூலத்தில் ஊதியம் வழங்க வேண்டும்: ஊராட்சி செயலாளர்கள் வலியுறுத்தல்

ADDED : மே 06, 2024 12:31 AM
திருப்புல்லாணி : ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம் கருவூலத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புல்லாணியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மங்களசாமி, வாணிஸ்ரீ உள்பட ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கும், துாய்மை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைத்திடவும், ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.
பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்து விட்டால் வாரிசு வேலை கிடைத்திட வழிவகை செய்யவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.