ADDED : மே 03, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மாநில துணை பிரசார செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனியசாமி வரவேற்றார். நீர், மோர் பந்தலை பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், போகலுார் ஒன்றிய தி.மு.க., செயலாளர் வக்கீல் குணசேகரன் திறந்து வைத்தனர். சங்க தலைமை நிலைய செயலாளர் ராஜன்பாபு நன்றி கூறினார்.