ADDED : ஏப் 23, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் இருந்து தொண்டிக்கு தினையத்துார் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
காடாங்குடி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் தொண்டிக்கு குடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் அங்கு முகம், கை, கால்களை கழுவிச் சென்றனர்.
ஆகவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தொண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் குழாயை சீரமைத்ததால் குடிநீர் சப்ளை சீரானது.

