ADDED : ஜூலை 02, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் தியாகி ராய் பிறந்தநாள் விழா நடந்தது.
சுதந்திர போராட்ட வீரர், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் ராய் பிறந்த நாள் விழாவில் பரமக்குடி இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் ஹாரிஸ் வரவேற்றார்.
சரஸ்வதி நகர் அருட்சான்று நிலைய மாணவர்கள் மற்றும் அரிமா சங்கத் தொழு நோயாளிகள் குடியிருப்பில் உள்ள முதியோருக்கு மதிய உணவு, அரிசி, மளிகை மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. வக்கீல் இளமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
