ADDED : மார் 06, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ராதிகா, ஒன்றிய செயலாளர் மோகன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.