/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் முடங்கி கிடக்கும் பேட்டரி வாகனம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

ADDED : ஏப் 01, 2024 06:17 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட பேட்டரி கார் செயல்படாமல் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னைக்கு இரு ரயில்களும், திருச்சி, கோவை, மதுரை போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர திருப்பதி மீனாட்சி, வாராந்திர ரயில்களான ஹூப்ளி, பெரோஷ்பூர் ஹம்சபார் எக்ஸ்பிரஸ், அயோத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஏராளமானோர் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கின்றனர்.
தற்போது ராமேஸ்வரம் செல்வதற்கு பாம்பன் பாலப்பணிகள் நடப்பதால் மண்டபம் ரயில் நிலையத்துடன் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. வட மாநில பயணிகள் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.
இங்கு வரும் பயணிகளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் நடை மேடைகளில் பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. இந்த கார் பழுதடைந்து பல ஆண்டுகளாக ரயில்வே ஸ்டேஷனில் முடங்கி கிடக்கிறது. வயதான ரயில் பயணிகள், குழந்தைகளுடன் வருபவர்கள் தங்கள் பெட்டியை அடையாளம் கண்டு ஏறுவதற்கு மிக சிரமப்படுகின்றனர்.
எனவே முடங்கி கிடக்கும் பேட்டரி காரை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் வ சதி தே வை
மேலும் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் காட்சிப்பொருளாக சேதமடைந்து வருகின்றன.