/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் கீழக்கரை ரயில்வே பாலம் எப்போது திறப்பீங்க: பணி துவங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது

ADDED : ஜூலை 04, 2024 01:20 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம்--கீழக்கரை ரோடு சக்கரகோட்டை ரயில்வே கேட் அருகே ரூ.30 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணி துவங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்சமயம் பணி முடிந்துள்ள நிலையில் பாலத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் - கீழக்கரை ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும் போது ராமேஸ்வரம் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு 3 கி.மீ., எளிதாக வந்து செல்ல முடியும். தற்போது இ.சி.ஆர்., பாலம் வழியாக 6 கி.மீ., சுற்றி வந்து சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து ரூ.30 கோடியில் சக்கரகோட்டை ரயில்வே கேட் அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 2018 ல் துவங்கியது. இப்பாலம் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாலப்பணிகள் முடிந்துள்ளன. மின் விளக்குகள், வர்ணம் பூசுதல் என சிறிய பணிகள் நடக்கிறது. இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல் மேம்பாலத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், பாலப்பணியில் சின்னச்சின்ன வேலைகள் உள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர்.---