/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிற்போக்கு கருத்துக்களை சீமான் ஆதரிக்கிறாரா செல்வப்பெருந்தகை கேள்வி

ADDED : செப் 09, 2024 04:52 AM
ராமநாதபுரம் : ''-நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிற்போக்கு கருத்துக்களை ஆதரிக்கிறாரா,'' என, ராமநாதபுரத்தில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் பிற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை மாநில அரசு கண்காணிக்க வேண்டும்.
மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதை சீமான் கண்டித்துள்ளார்.
அப்படி என்றால் அவர் பிற்போக்கு கருத்துக்களை மூட நம்பிக்கைகளை ஆதரிக்கிறாரா.
முற்போக்கு அரசியல் செய்யும் சீமான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது பாதுகாப்போம் என்றனர்.
தற்போது மீனவர்கள் கைது, அவர்களின் வலைகள் அறுத்தெறியப்படுவது, மீனவர்கள் கொலை, தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை பெற்றுத்தருவது என தொடர்கிறது. இவற்றை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றார்.