/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்காலத்திற்குள் ராமநாதபுரம் ஊருணிகள் துார்வாரப்படுமா: பரமாரிப்பின்றி குப்பை, கழிவுநீரால் சுகாதாரக்கேடு

ADDED : ஆக 24, 2024 03:45 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சிகள் கட்டுபாட்டில் உள்ள ஊருணிகளில் சிலவற்றை தவிர்த்து பல பலஆண்டாக பராமரிக்கப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்தும், குப்பைதொட்டியாகி உள்ளது. அவற்றை மழைக்காலத்திற்கு துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்பதால், மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க ஏராளமான ஊருணிகள் வெட்டப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நகரில்மட்டும் 20க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இவை நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன.
மாவட்டத்தை பொறுத்தமட்டில் நிலத்தடி நீர் 20 முதல் 40 அடியில் கிடைத்தாலும் அதன் உப்புநீராகவே உள்ளது. இதனால் மக்கள் அன்றாட குடிநீர், சமையல் செய்வதற்கு காவரிகுடிநீர், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றை தவிர்த்து பெரும்பாலான ஊருணிகள் பராமரிபக்கப்படாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வெளிப்பட்டிணம்- ஓம்சக்தி நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாயக்கார ஊருணி, முதுனால் ரோட்டில் நீலகண்டி ஊருணி, ராமேஸ்வரம் ரோட்டில் சோத்துாருணி ஆகியவை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த ஊருணிகள் நீர்வரத்து வாய்க்கால் பராமரிக்கப்படாமல் பாழாகியுள்ளது.
தற்போது ஊருணி குப்பை, சாக்கடை கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசுடைந்துள்ளது. கரைப்பகுதியில் முழுமையாக கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.
எனவே நிலத்தடிநீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ஊருணிகளை ஆக்கிரமித்துள்ள கருவேலை மரங்களை அகற்றி துார்வார கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.