/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மங்களக்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
/
மங்களக்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
ADDED : ஜூலை 02, 2024 06:23 AM

திருவாடானை : திருவாடானை அருகே மங்களக்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
மங்களக்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. தேவகோட்டை - ஓரியூர் ரோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
டூவீலர்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். ரோட்டோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வட்டாணம், திருவாடானை, தேவகோட்டை என்ற ஊர் பெயர் பலகை ஆக்கிரமிப்பால் மறைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.