/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பொட்டிதட்டி குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா: துவங்கி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது
/
ராமநாதபுரம் பொட்டிதட்டி குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா: துவங்கி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது
ராமநாதபுரம் பொட்டிதட்டி குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா: துவங்கி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது
ராமநாதபுரம் பொட்டிதட்டி குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா: துவங்கி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது
ADDED : பிப் 25, 2025 07:00 AM
மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் பெயரளவில் மட்டுமே சிறப்பு நிலை நகராட்சியாக உள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 20 லட்சம் லிட்டரும், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் பற்றாக்குறையை நகராட்சி நிர்வாகம் சரிசெய்து வருகிறது. ராமநாதபுரம் --மதுரை ரோட்டில் உள்ள பொட்டிதட்டி எனும் இடத்தில் வைகை ஆற்றிலிருந்து கிணறு அமைத்து ரூ.12 கோடியில் குடிநீர் திட்டம் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த 2020 ல் இத்திட்டத்திற்காக லேத்தம்ஸ் சாலையில் நீர்தேக்கும் தரைதள தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த தொட்டியில் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கும் வசதியும் உள்ளது. குழாய்கள் மூலம் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் தேக்கி நகருக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் நகரின் குடிநீர் பிரச்னையை சரிசெய்யலாம்.
இந்நிலையில் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டு மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 2022ல் நகரில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. அதன் பிறகு நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக நெடுஞ்சாலை துறை நிலம் கையகப்படுத்தும் பணியால் பொட்டிதட்டி குடிநீர் திட்டம் கிடப்பில் உள்ளது.
எனவே வரும் கோடை காலத்தில் நகரில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க பொட்டிதட்டி திட்டத்தை மீண்டும் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பரமக்குடி- ராமநாதபுரம் ரோடு விரிவாக்க பணி காரணமாக நெடுஞ்சாலைத் துறையினர் குழாய் பதிக்க அனுமதி தரவில்லை. இதையடுத்து நயினார் கோவில் ரோடு, காவனுார் வழியாக குழாய்களை பதித்து சூரங்கோட்டை வழியாக நகருக்குள் குடிநீரை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளது என்றனர்.
ராமநாதபுரம், பிப்.25-
ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.12 கோடியிலான பொட்டிதட்டி குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. கோடை காலத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு புத்துயிர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.