/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா.. கிடப்பில்! பக்தர்களின் கோரிக்கை
/
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா.. கிடப்பில்! பக்தர்களின் கோரிக்கை
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா.. கிடப்பில்! பக்தர்களின் கோரிக்கை
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா.. கிடப்பில்! பக்தர்களின் கோரிக்கை
ADDED : ஏப் 29, 2024 11:58 PM

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் முன்புஉள்ள வாசுகி தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளைப் பெற்றதாக நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு சவுந்தர்ய நாயகி அம்மன், நாகநாத சுவாமி அருள் பாலிக்கின்றனர்.
இங்குள்ள புற்றடியில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற தினமும் வருகின்றனர். மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் பிறந்த குழந்தையை கோயிலில் விட்டு மீண்டும் ஏலம் எடுக்கும் முறையும் உள்ளது.
இதேபோல் திருமண தடை உள்ளிட்ட அனைத்து தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் காளஹஸ்திக்கு இணையாக உள்ளது. இதனால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிகஅளவில் வருகின்றனர்.
இக்கோயிலுக்கு வருவோர் கோயில் எதிரிலுள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் தீர்த்த குளம் சில ஆண்டுகளாக முற்றிலும் பராமரிப்பின்றி குப்பை மேடாகி வருகிறது.
குளத்தைச் சுற்றியுள்ளவர்கள் கழிவு நீரை நேரடியாக கலக்கும்படி விட்டுஉள்ளனர். இது குறித்து ஒவ்வொரு முறை பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கும் போதும் அறநிலையத்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலமுறை ஆய்வு செய்து சென்றதோடு மறந்துவிடுகின்றனர்.
இதனால் குளம் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆகவே நயினார்கோவில் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு உள்ள இக்கோயிலில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. உடனடியாக குளக்கரையை சீரமைத்து வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

