/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
/
ராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
ADDED : மார் 09, 2025 03:57 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தின விழா பல்வேறு அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகளிலும் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சார்பில் மகளிர்போலீசார் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கியது. சந்தீஷ் எஸ்.பி., துவக்கி வைத்தார்.
* செய்யது அம்மாள் பப்ளிக்பள்ளி, மெட்ரிக் பள்ளி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். அறக்கட்டளை உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா துவக்கி வைத்தார். செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் ஆர்த்தி வரவேற்றார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க உறுப்பினர் டாக்டர் சுஜாதா, இண்டராக்ட் சங்கத்தலைவர் வித்யா பிரியதர்ஷினி, ரோட்டரி மகளிர் தலைவர் உமாராணி, முருகேஸ்வரி, ராமநாதபுரம் தலைவர் ஷீலா, செயலாளர் பாலமுருகன், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தலைவர் ஜெகதீஸ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஜூலிநேசமணி நன்றி கூறினார்.
* செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் வளனரசி வரவேற்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் ஷிபா பாபு அப்துல்லா, டாக்டர் பாத்திமா ஷானாஸ், டாக்டர் அஜீதா ஆகியோர் பங்கேற்றனர். மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கணினி துறை பேராசிரியர் கண்மணி நன்றி கூறினார்.
* மகளிர் தினத்தை முன்னிட்டு சேதுபதி நகர் அன்னை சரஸ்வதி பூங்காவில் ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலக அலுவலர் (பொறுப்பு) அனிதா மரக்கன்றுகள் நட்டார். உடன் பசுமை முதன்மையாளரான பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் பங்கேற்றார்.
*ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா, கலை பண்பாட்டுத்துறை, ஜவஹர் சிறுவர் மன்றம், பகுதி நேர கலைப்பயிற்சி மையம் இணைந்து மாணவர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள்
ராமநாதபுரம் டி.டி., விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடத்தினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர்வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, தேசிய இளையோர் தன்னார்வலர் ஆயிஷாபர்வீன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சிலம்ப ஆசிரியர்கள்தனசேகரன், ஆகாஷ் பங்கேற்றனர். ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
*கீழக்கரை முகம்மதுசதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகமது தலைமை வகித்தார். முதல்வர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி டீன் அகாடமிக்ஸ் திராவிடச்செல்வி வரவேற்றார்.
ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம், சிக்கல் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ராமநாதபுரம் கதிரியக்க மருத்துவ நிபுணர் ரம்யா, கல்லுாரியின் முன்னாள் மாணவி எலக்ட்ரானிக்ஸ் சொல்யூஷன் தலைமை அலுவலர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கு கவிதை, பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மின்னியல் தொடர்பு துறை பேராசிரியர் சரோஜினி தேவி நன்றி கூறினார்.
*திருவாடானை போலீஸ்ஸ்டேஷனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். போலீஸ்ஸ்டேஷனில் பணிபுரியும் மகளிர் போலீசார் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். எஸ்.ஐ., கலா மற்றும் போலீசார் கேக் வெட்டினர். விழாவில் எஸ்.ஐ., ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன்மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் காந்திராசு தலைமை வகித்தார். தாளாளர் சந்திரசேகரன், முன்னாள் ஆசிரியர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆட்லின் லீமா வரவேற்றார். பெண் குழந்தைகள், சிறந்த பெண்ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்கள் சார்பில் பேச்சுபோட்டி கலைநிகழ்ச்சிகள் நடந்தது.