ADDED : ஆக 11, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் செய்யது இப்ராஹிம், பேராசிரியர் டாக்டர் ரஹ்மத் அஜிதா ஆகியோர் கர்ப்பிணிகள், பிரசவமான பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
செய்யது அம்மாள் நர்சிங் பள்ளி மாணவி களுக்கு தாய்ப்பால் தொடர்பான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடந்தது.
இதில் வென்ற மாணவிகளுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாபு அப்துல்லா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.