/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க அனுமதிச் சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்

ADDED : மார் 05, 2025 06:13 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்குவதற்குபோக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. விருப்பமுள்ளபுதியவர்கள், ஏற்கனவே மினிபஸ் இயக்குபவர்கள் மார்ச் 11க்குள் அனுமதிச் சீட்டு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து துறை சார்பில் 50 புதிய வழித்தடங்களின்விரிவான விபரம் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழில்அறிவிக்கப்பட்டுள்ளது
இடைப்பட்ட ஊர்களின் வழியாக மாவட்டநிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்க நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
இதன்படி ஏற்கனவே மினி பஸ் அனுமதிசீட்டு பெற்று மினி பஸ் இயக்கிக் கொண்டுள்ள வாகனஉரிமையாளர்கள் புதிய திட்டத்தின் படி வழித்தடத்தை நீட்டித்து அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் புதிய அனுமதி சீட்டுபெற விரும்புவோர் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணம்செலுத்தி தேவையான ஆவணங்களுடன் பூர்த்திசெய்து ராமநாதபுரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில்ஆஜராகி மார்ச் 11 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.