ADDED : ஜூன் 10, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : பைக் ரேசில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
தொண்டியில் சில மாதங்களாக இரு சக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர்கள், மாணவர்கள் பைக் ரேஸ் என்ற பெயரில் சீறிப் பாய்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்குள் வீலிங் செய்த இரண்டு பேர் இறந்துள்ளனர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால் ரோட்டோரம் குடியிருப்போர் பதற்றம் அடைந்துள்ளனர்.
பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.