/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.எல்.ஏ., பேனரால் வாலிபர் பலி
/
எம்.எல்.ஏ., பேனரால் வாலிபர் பலி
ADDED : செப் 05, 2024 02:29 AM

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா தந்தை நினைவு நாளுக்கு வைத்த பிளக்ஸ் பேனரால் வாலிபர் பலியானார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் 34, செல்வகுமார் 28. இருவரும் மருதுபாண்டியர் சிலை அருகே உள்ள கடையில் டீ சாப்பிட்டனர். டீக்கடை அருகே ஆக.31ல் நடந்த, ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,காதர்பாட்ஷா தந்தையின் 12ம் ஆண்டு நினைவஞ்சலிக்காக கட்சி நிர்வாகிகள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.
அந்த பிளக்ஸ் போர்டை கழட்டுமாறு இவர்களிடம் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து மனோஜ்குமார், செல்வக்குமார் கழற்றிய போது அருகில் இருந்த மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் செல்வகுமார் பலியானார். மனோஜ்குமார் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த பேனருக்கு அனுமதி பெறப்பட்டதா, எத்தனை நாட்களுக்கு அனுமதி பெறப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.