/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே 100 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
/
கமுதி அருகே 100 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 01, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே மூலைகரைப்பட்டி கிராமத்தில் செல்வ கருப்பண்ணசுவாமி கோயில் 17ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
விழாவில் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். செல்வ கருப்பண்ண சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு கறி சமைக்கப்பட்டது. சுவாமிக்கு படையலிடப்பட்டு சிறப்புபூஜை செய்தனர். மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.