நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் கோயிலின் 47ம் ஆண்டு மகா சிவராத்திரி மாசிக்களரி விழா மார்ச் 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. தினந்தோறும் கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது. நேற்று 1008 விளக்கு பூஜை நடந்தது. விழாவில் முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

