/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு
/
108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு
108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு
108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு
ADDED : ஜன 23, 2025 03:56 AM
திருவாடானை: ஆம்புலன்ஸ் 108ல் ஆண் குழந்தை பிறந்தது. சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாடானை அருகே வெட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலலிதா 37. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. திருவாடானை ஆம்புலன்ஸ் 108க்கு தொடர்பு கொள்ளபட்டது. ஜெயலலிதாவை ஏற்றிக் கொண்டு டிரைவர் அரவிந்தசாமி ஆம்புலன்சை ஓட்டினார். மருத்துவ உதவியாளர் அன்பு உடன் சென்றார். தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பிரசவத்திற்கான அறிகுறி இருந்ததால் இரவு 11:30 மணிக்கு வாகனம் சாலை ஓரம் நிறுத்தப்பட்டது.
அங்கு மருத்துவர்களின் அறிவுரைப் படி பிரசவம் பார்க்கப்பட்டதில் ஜெயலலிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவும், குழந்தையும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சமயோசிதமாக செயல்பட்டு ௨ உயிர்களை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர், டிரைவரை மக்கள் பாராட்டினர்.