நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் ஆடி மாத கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.
இதனை முன்னிட்டு பரமக்குடி பறவைக் காவடி பாதயாத்திரை குழு சார்பில் குமரக்கடவுள் முருகனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள், பழங்கள், திரவிய பொடி உட்பட 33 வகையான அபிஷேகம் நடந்தது. பின்பு 108 சங்காபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கார்த்திகை சிறப்பு பூஜை விழாவில் கமுதி, பரமக்குடி, அபிராமம், முதுகுளத்துார் உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.