/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கும்பாபிஷேக விழாவில் 12 பவுன் நகை திருட்டு
/
கும்பாபிஷேக விழாவில் 12 பவுன் நகை திருட்டு
ADDED : நவ 11, 2025 03:34 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் 12 பவுன் நகை, அலைபேசி, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
ராமேஸ்வரம் ஓலைகுடா கடற்கரையில் முருகவேல் சுவாமி என்பவரது ஏற்பாட்டில் சமுத்திர வேல்முருகன் கோயில் அமைத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோவில், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்குள் பதுங்கி இருந்த மர்மநபர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த சொர்ணகாந்தி 60, இடம் 5 பவுன், பரமக்குடி வள்ளியிடம் 61, 3 பவுன் தங்க செயின் மற்றும் திருப்புல்லாணி, ராமநாதபுரம் சேர்ந்த இரு பெண்களிடம் தலா 2 பவுன் செயின்கள் என 12 பவுன் செயினை பறித்தனர். மேலும் ஒரு பெண்ணிடம் அலைபேசி, இருவரிடம் பர்சை திருடி சென்றுள்ளனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

