/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி
/
இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி
ADDED : நவ 11, 2025 03:35 AM
ராமநாதபுரம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் சார்பில், டூவீலர் பழுதுபார்க்கும்பயிற்சி நாளை (நவ.12) துவங்குகிறது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஒரு மாதகாலம் பயிற்சி நடைபெறும். காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ், வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு இன்று (நவ.11) கடைசி நாளாகும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 88259 54443, 80567 71986 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

