/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் 120 பேருக்கு கிரைண்டர் வழங்கிய வட மாநில பக்தர்கள்
/
ராமேஸ்வரத்தில் 120 பேருக்கு கிரைண்டர் வழங்கிய வட மாநில பக்தர்கள்
ராமேஸ்வரத்தில் 120 பேருக்கு கிரைண்டர் வழங்கிய வட மாநில பக்தர்கள்
ராமேஸ்வரத்தில் 120 பேருக்கு கிரைண்டர் வழங்கிய வட மாநில பக்தர்கள்
ADDED : செப் 28, 2024 06:28 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நடந்த ராமாயண சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்ற வட மாநில பக்தர்கள் 120 பேருக்கு இலவசமாக கிரைண்டர் இயந்திரம் வழங்கினார்கள்.
ராமேஸ்வரத்தில் மும்பையை சேர்ந்த சைதன்ய கோசாலை டிரஸ்ட் சார்பில் தலைவர் ரவீந்திர பாட்டக் தலைமையில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா, உ.பி., குஜராத், ம.பி., அரியானாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
கடந்த இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வட மாநில பக்தர்கள், இங்குள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு கிரைண்டர் வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 120 பெண்களுக்கு தலா ஒரு கிரைண்டர், 5 கிலோ அரிசி, 1 கிலோ உளுந்தம் பருப்பு, 1 சேலையை இலவசமாக வழங்கினர்.
ராமேஸ்வரம் கம்பன் கழகத் தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் ரோஜர், முன்னாள் தலைவர் முருகன், கம்பன் கழக நிர்வாகிகள் பாஸ்கரன், அரவிந்த், ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.