/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது
ADDED : அக் 04, 2025 02:37 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 1200 கிலோ பீடி இலை கடத்த முயன்ற வரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புது மடம் கடற்கரை பகுதியில் பீடி இலை கடத்துவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 1200 கிலோ பீடி இலை பண்டல்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.
வாகனத்தில் பீடி இலை கடத்தி வந்த புதுமடம் தெற்கு தெரு சகுபான் அலி என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். பீடி இலை பண்டல்கள், வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.