/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
/
1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ADDED : நவ 11, 2025 03:36 AM

திருவாடானை: திருவாடானை அருகே கல்லுாரில் சரக்கு வாகனத்தில் கடத்தபட்ட 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லுார் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தபடுவதாக தகவல் கிடைத்தது.
ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் பிரிவு எஸ்.ஐ. அருண் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது 28 மூடைகளில் 50 கிலோ எடையுள்ள 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
க டலாடி யை சேர்ந்த காளிஸ்வரன் 35, திருக்காளிமுத்து 22, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அரிசியை சிவகங்கை மாவட்டம் புதுவயல் போன்ற இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்த வந்துள்ளது.

