ADDED : நவ 04, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: வாரணாசியில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயிலில் 15 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவ.,4) மதியம் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அப்போது ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., விக்னேஸ்வரன், போலீசார் ரயில் பெட்டியை சோதனையிட்டனர். இதில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று நடந்த மூடையை பறிமுதல் செய்தனர்.
அதில் 15 கிலோ குட்கா இருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து கடத்தியவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.
