/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உச்சிநத்தம்- வி.சேதுராஜபுரம் வரை பாலம் அமைக்காததால் 15 கி.மீ., சுற்றும் அவலம்

ADDED : டிச 21, 2024 07:35 AM

பெருநாழி: பெருநாழி அருகே உச்சிநத்தம் கிராமத்தில் இருந்து வி.சேதுராஜபுரம் வரை 2 கி.மீ.,ல் உள்ள பால பணிகள் 8 மாதங்களாக ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் 15 கி.மீ., சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.
கனமழையால் கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ள நீர் பாலத்தை கடந்து வேம்பார் கடலில் கலக்கிறது. பாலம் அமைப்பதற்கான பக்கவாட்டு தனி பாதை அமைக்காத நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த ரோட்டை பயன்படுத்தும் 10 கிராம மக்கள் 15 கி.மீ., சுற்றிவர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வி.சேதுராஜபுரம் பா.ஜ., அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் முத்து வல்லாயுதம் கூறியதாவது:
உச்சிநத்தம் வழியாக 2 கி.மீ., பாலம் பணிகள் 8 மாதங்களாக நடக்கிறது. ரோட்டில் பயணிக்க வழியின்றி டி.எம்.கோட்டை, செஞ்சடைநாதபுரம், கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசங்கோட்டை, வெள்ளையாபுரம், முத்துராமலிங்கபுரம், டி.கரிசல்குளம், சேதுராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் செவல்பட்டி வழியாக தங்கம்மாள்புரம், சூரங்குடி, உச்சிநத்தம் செல்ல 15 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
பணிகளை விரைந்து முடிக்கவும் மீதமுள்ள இரண்டு கட்டப்படாமல் உள்ள பாலங்களின் பணிகளை விரைவாக செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.