/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜமாபந்தியில் பெறப்பட்ட 150 மனுக்களுக்கு தீர்வு
/
ஜமாபந்தியில் பெறப்பட்ட 150 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 23, 2025 11:37 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மே 20ல் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. 20ல் மங்களக்குடி, 21ல் புல்லுார், 23ல் தொண்டி, 27ல் திருவாடானை பிர்காக்கள் ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து 240 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் ஆண்டி கூறியதாவது: கணினி மூலம் பட்டா திருத்தம், மகளிர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை கேட்டு நிறைய மனுக்கள் பெறப்பட்டது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 240 மனுக்களில் 150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஆய்வில் உள்ளது.
அரசின் அறிவிப்பிற்கு பின் மகளிர் உதவித் தொகை மனுக்கள் பெறப்படும். அனுமதி இல்லாமல் பனைமரங்கள் வெட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மணல் திருடர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.