/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 சவரன் நகை கொள்ளை
/
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 சவரன் நகை கொள்ளை
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 சவரன் நகை கொள்ளை
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 சவரன் நகை கொள்ளை
ADDED : டிச 08, 2025 04:56 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ரியல் எஸ்டேட் அதிபரின் பூட்டிய வீட்டில், 160 சவரன் தங்க நகைகள், 18 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அர்ச்சுனன், 62; ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர், டிச., 5ல் குடும்பத்துடன் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு சென்ற நிலையில், நேற்று காலை இவரது வீட்டின் பின்பக்க கேட், கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது குறித்து அப்பகுதி மக்கள், அர்ச்சுனனுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்து பார்வையிட்ட அவர், பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 160 சவரன் தங்க நகைகள், 18 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக, ஆர்.எஸ்.மங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இவற்றின் மதிப்பு 1.60 கோடி ரூபாய்.
வீட்டில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய பஸ் ஸ்டாப் வரை, இரண்டு முறை போலீசாரின் மோப்ப நாய் சென்று திரும்பியது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டமர்ம நபர்களை தேடுகின்றனர்.

