/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் 1608 விளக்கு பூஜை ஆன்மிக சொற்பொழிவு
/
உத்தரகோசமங்கையில் 1608 விளக்கு பூஜை ஆன்மிக சொற்பொழிவு
உத்தரகோசமங்கையில் 1608 விளக்கு பூஜை ஆன்மிக சொற்பொழிவு
உத்தரகோசமங்கையில் 1608 விளக்கு பூஜை ஆன்மிக சொற்பொழிவு
ADDED : மே 27, 2025 12:47 AM

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் பிரகார சன்னதியில் 1608 விளக்கு பூஜை நடந்தது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, நயினார்கோவில், உத்தரகோசமங்கை உள்ளிட்ட பழமையான பிரசித்தி பெற்ற கோயில்களில் விளக்கு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சன்னதி மற்றும் மங்களேஸ்வரி அம்மன் சன்னதி, அலங்கார பிரகார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 1608 விளக்குகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாமாவளி, அர்ச்சனை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது.
ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்று பிரசாதம் பெற்றுச் சென்றனர்.