/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரில் கடத்திய 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
காரில் கடத்திய 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : டிச 11, 2025 05:17 AM
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காரில் கடத்தப்பட்ட 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கீழக்கரை அருகே ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மரைன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றதால் துரத்திப் பிடித்தனர். காரில் இருந்து இறங்கிய இருவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.
அதில் 33 மூடைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. தப்பி ஓடியவர்கள் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த பால சுப்பிரமணியன் 45, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மாரிநாதன் 48, என விசாரணையில் தெரிய வந்தது.
1650 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் போலீசார் அரசு வாணிப கோடவுனில் ஒப்படைத்தனர்.

