/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி, கடலாடி ஒன்றியங்களை பிரித்து புதிதாக சாயல்குடி யூனியன் உருவாக்கம்
/
கமுதி, கடலாடி ஒன்றியங்களை பிரித்து புதிதாக சாயல்குடி யூனியன் உருவாக்கம்
கமுதி, கடலாடி ஒன்றியங்களை பிரித்து புதிதாக சாயல்குடி யூனியன் உருவாக்கம்
கமுதி, கடலாடி ஒன்றியங்களை பிரித்து புதிதாக சாயல்குடி யூனியன் உருவாக்கம்
ADDED : டிச 11, 2025 05:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளை கொண்டுள்ள கமுதி, கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரித்து 33 ஊராட்சிகளுடன் புதிதாக சாயல்குடி ஊராட்சி ஒன் றியம் உருவாக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் தற்போது ராமநாதபுரம், பரமக்குடி, போகலுார், நயினார்கோவில், முதுகுளத்துார், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, கமுதி, கடலாடி, மண்ட பம் என 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் கடலாடியில் மட்டும் 60 கிராம ஊராட்சி களும், கமுதியில் 53 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இதன் காரணமாக இவற்றை பிரித்து புதிதாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தற்போது கமுதி, கடலாடியில் உள்ள சில ஊராட்சிகளை பிரித்து புதிதாக 33 ஊராட்சி களுடன் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களாக சாயல்குடி புதிதாக உருவாக்கப்பட உள்ளது.
மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி களின் பெயர் பட்டியல்:
கடலாடி (40 ஊராட்சிகள்): ஏ.புனவாசல், ஆப்பனுார், சித்திரங்குடி, இளஞ்செம்பூர், ஏனாதி, ஏர்வாடி, இதம்பாடல், கடலாடி, கடுகுசந்தை, கண்டிலான், கருங்குளம், கீழச்சிறுபோது, கீழகிடாரம், கீழசாக்குளம், கீழசெல்வனுார், கிடாதிருக்கை, கொத்தங்குளம், மங் களம், மாரந்தை, மாரியூர், மீனங்குடி, மேலசிறுபோது, மேலக்கிடாரம், மேலசெல்வனுார், ஒப்பிலான், ஓரிவயல், ஒருவானேந்தல், பனிவாசல், பன்னந்தை, பேய்க்குளம், பெரியகுளம், பி.கீரந்தை, பொதிகுளம், சவேரியர்பட்டினம், சிக்கல், சிறைகுளம், சொக்கானை, எஸ்.பி.கோட்டை,தனிச்சியம், வாலி நோக்கம்.
கமுதி (40 ஊராட்சிகள்): அச்சங்குளம், ஆனையூர், அ.தரைக்குடி, எழுவனுார், இடையன்குளம், இலந்தைக்குளம், காக்குடி, கீழ முடிமன்னார் கோட்டை, கீழராமநதி, கே.நெடுங் குளம், கே.வேப்பங் குளம், மண்டல மாணிக்கம், மரக்குளம், மாவிலங்கை, மேலமுடி மன்னார்கோட்டை, மேலராமநதி, முஸ்டக் குறிச்சி, முதல் நாடு, நகரத்தார் குறிச்சி, நாராயண புரம், நத்தம், நீராவி, என்.கரிசல்குளம், ஓ.கரிசல் குளம், பாக்குவெட்டி.
பம்மனேந்தல், பாப்பனம், பாப்பாங்குளம், பசும்பொன், பேரையூர், புதுக்கோட்டை, புல் வாய்க்குளம், ராமசாமிபட்டி, சடையனேந்தல், செங்கப்படை, டி.புனவாசல், உடைநாதபுரம், வலையபூக்குளம், வல்லந்தை, வங்காருபுரம்.
சாயல்குடி (33 ஊராட்சிகள்): அரியமங்கலம், எருமைக்குளம், இடிவிலகி, காடமங்களம், காத்தனேந்தல், கொம்பூதி, கோவிலாங்குளம், எம்.புதுக்குளம், பாப்புரெட்டியபட்டி, பெருநாழி, பொந்தம்புளி, டி.வாலசுப்பிர மணியபுரம், திம்மநாதபுரம், அ.உசிலங்குளம், அவதாண்டை, காணிக்கூர், கன்னிராஜபுரம், கொக் கரசன்கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, எம். கரிசல்குளம், மூக்கையூர், நரிப்பையூர், பிள்ளையார்குளம், செஞ்சடை நாதபுரம், செவல்பட்டி, எஸ்.கீரந்தை, எஸ்.தரைக்குடி, எஸ்.வாகைகுளம், திருமழுகந்தன் கோட்டை, டி.கரிசல்குளம், டி.வேப்பங்குளம், உச்சிநத்தம், வி.சேதுராஜபுரம்.

