UPDATED : அக் 13, 2026 05:38 PM
ADDED : அக் 13, 2026 05:36 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நாகாச்சி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கயாக்கிங், கனாயிங் (துடுப்பு படகு) போட்டிகள் அக்.,17 ல் நடைபெற உள்ளன.
மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்அக்.,15 முதல் 28 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 6 மண்டலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கயாக்கிங், கனாயிங் விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கிறது.
இதன்படி அக்.,17 காலை 7:00 மணிக்கு கயாக்கிங், கனாயிங் விளையாட்டு போட்டிகள் உச்சிபுளி அருகே நாகாச்சி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிப்பு விழாவில் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
