/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 180 கடைகளில் சோதனை ரூ.1.75 லட்சம் அபராதம்

ADDED : டிச 06, 2024 05:18 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடைகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு 180 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் 27.27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதை பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 180 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 கடைகளுக்கு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்தனர். * பஜார் போலீசார் பவுண்டு கடைத்தெருவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே முதலுார் நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பிரசாத் 34, அந்தப் பகுதியில் உள்ள முனியசாமி என்பவரின் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீசாரை கண்டதும் பிரசாத் மற்றும் முனியசாமி அங்கிருந்து தப்பி ஓடினர். பிரசாத்தை மடக்கி பிடித்த போலீசார் அவரிடமிருந்து 19.27 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய முனியசாமியை தேடி வருகின்றனர்.