ADDED : டிச 19, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பையுடன் நின்ற இரண்டு பேரை சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் 50 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஓரியூர் திட்டையை சேர்ந்த வசந்த் வில்சன் 25, பாசிபட்டினம் சாகுல் ஹமீது 42, ஆகியோரை கைது செய்தனர்.