தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 2 நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு

2 நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு

2 நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு


ADDED : அக் 11, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: தீ பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு முயற்சியை தீயணைப்புத் துறையினர் துவக்கியுள்ளனர். இது குறித்து திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:

மக்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் 'வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் இன்று (அக்., 11) நாளை(அக்.,12) ஆகிய இரு நாட்களுக்கு காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல் 5:00 மணி வரை விழிப்புணர்வு வகுப்பு நடத்துவர். மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us