/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் தவறவிட்ட 2 பவுன் செயின் மீட்பு
/
ரயிலில் தவறவிட்ட 2 பவுன் செயின் மீட்பு
ADDED : ஆக 15, 2025 11:28 PM
ராமேஸ்வரம்:சென்னை டூ ராமேஸ்வரம் ரயிலில் தவறவிட்ட 2 பவுன் தங்க செயினை ரயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா முகமது மனைவி நஸ்ரின் ஜகான் 48. இவர் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த போர்ட் மெயில் ரயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணித்து புதுக்கோட்டை ஸ்டேஷனில் இறங்கியுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் கழன்று படுக்கையில் விழுந்தது. இதனை கவனிக்காத நஸ்ரின் ஜகான், செயின் காணாமல் போனதால் பதட்டமடைந்தார். ரயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று காலை ரயில் ராமேஸ்வரம் வந்தவுடன் தனிப்பிரிவு போலீஸ்காரர் மல்கோத்ரா பாண்டியன், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டியில் கிடந்த செயினை மீட்டு நஸ்ரினிடம் ஒப்படைத்தனர்.