/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றை கடந்து சென்ற 2000 கன அடி தண்ணீர் வலது, இடது கால்வாயில் 300 கன அடி

ADDED : அக் 29, 2024 04:52 AM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் 2000 கன அடி தண்ணீர் கடந்து சென்ற நிலையில் வலது, இடது பிரதான கால்வாய்களில் தலா 300 கன அடி வீதம் செல்கிறது.
கடந்த சில நாட்களாக வைகை அணைப் பகுதி, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர் மழையால் நேற்று முன்தினம் காலை ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகு அணையை தண்ணீர் அடைந்தது. 2600 கன அடி வரை தண்ணீர் வந்த நிலையில் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றில் 2000 கன அடி திறக்கப்பட்டது.
இதனால் ஒரு சில பகுதிகளில் வைகை ஆற்றில் இரு கரையை தொட்டு தண்ணீர் செல்கிறது. இதே போல் நேற்று முன் தினம் இரவு பரமக்குடி வைகை ஆற்றை கடந்து தண்ணீர் சென்ற நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வலது, இடது பிரதான கால்வாய்களில் தலா 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த நீரின் அளவு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் மழையளவு குறைந்ததால் வரத்து குறைய வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி உள்ளதால் கால்வாய்களுக்கு தண்ணீரை அதிகமாக கொடுத்து கண்மாய் பாசனம் சிறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.