/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் 210 எல்.இ.டி.,விளக்குகள்: தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜன 15, 2024 04:26 AM
பரமக்குடி : -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் 210 எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பரமக்குடி நகராட்சியில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
இதன்படி காட்டு பரமக்குடி துவங்கி சுந்தர் நகர் வரையிலும், எமனேஸ்வரம் வைகை நகர் துவங்கி ஜீவா நகர் வரையும் ரோடுகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டதுடன் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து ரோடு நிலை குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது.
இதன் எதிரொலியாக 15 வது நிதி திட்டத்தில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் இரண்டு ஓரங்களிலும் தலா 105 விளக்குகள் உட்பட மொத்தம் 210 எல்.இ.டி., மின்விளக்குகள் கம்பம் நடப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவிற்கு நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தார். மின்விளக்குகளை எம்.எல்.ஏ., முருகேசன் இயக்கி வைத்தார். விழாவில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.