/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை காலத்தில் பாம்புகள் வருவதால் 246 பேர் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு
/
கோடை காலத்தில் பாம்புகள் வருவதால் 246 பேர் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு
கோடை காலத்தில் பாம்புகள் வருவதால் 246 பேர் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு
கோடை காலத்தில் பாம்புகள் வருவதால் 246 பேர் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு
ADDED : மே 16, 2025 03:00 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கோடை காலத்தில் பாம்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் 246 பேர் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் தீயணைப்புத்துறை சார்பில் ஜன., முதல் மே மாதம் வரை தீவிபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் 29 அழைப்புகள் விடுத்துள்ளனர். தீயில் சிக்கியவர்களை மீட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களை பாதுகாத்துள்ளனர்.
பாம்புகள் புகுந்ததால் 246 பேர் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பாம்புகளை லாவகமாக பிடித்து தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அருகில் வனத்துறை அலுவலகம் இல்லாததால் தீயணைப்புத்துறையினரே பாம்புகளை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.
விஷ வண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் 30 பேர் அழைப்பு விடுத்துள்ளனர். இது போன்று தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு தீயணைப்புத்துறையினர் திறமையாக செயல்பட்டு பொதுமக்களை பாதுகாத்துள்ளனர்.மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கோமதி அமுதா கூறுகையில், பொதுவாக கோடை காலங்களில் பாம்புகள் குளிர்ச்சிக்காக வீடுகளுக்குள் வருகின்றன. ஏ.சி., இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள அறைகளை நோக்கித்தான் அதிகளவில் வருகின்றன.
ஏ.சி., இயந்திரத்தில் இருந்து வெளியேறும் கசிவுநீர் குளிர்ச்சியை தருவதால் ஏ.சி., பொருத்தப்பட்ட அறைகளை குறி வைத்து பாம்புகள் வருகிறது. பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.