தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மறியல் நடத்திய 27 பேர் கைது

மறியல் நடத்திய 27 பேர் கைது

மறியல் நடத்திய 27 பேர் கைது


UPDATED : ஜூலை 01, 2026 07:03 PM

ADDED : ஜூலை 01, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 07:03 PM ADDED : ஜூலை 01, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை 'விபி ஜி ராம் ஜி' என பெயர் மாற்றியதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெயரை மாற்றக்கூடாது. அதற்கான 100 சதவீதம் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை அளிக்க வேண்டும். கருவிழி பதிவு, கைரேகை பதிவு என்ற பெயரில் வேலையை பறிக்க முயல்கின்றனர் என்றார்.

தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். பொருளாளர் அரிகர சுதன், துணை தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us