UPDATED : ஜூலை 01, 2026 07:52 PM
ADDED : ஜூலை 01, 2026 07:51 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக புளோரா மேரி 60, பணியாற்றி வந்தார். 42 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி தொருவளூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். 21 ஆண்டு காலம் சமூக அறிவியல் பாடத்தை சிறப்பாக எடுத்து நல்ல தேர்ச்சி விழுகாட்டை காண்பித்து பல சாதனை மாணவர்களை உருவாக்கினார். கடந்த 2014ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது(டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு ராமநாதபுரத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வில்சன் சமாதான குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சீதாலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் மலரும் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். கேக் வெட்டி மாணவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
விழாவில் ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கோகிலா மற்றும் நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
---
