/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காக்கி உதவும் கரங்கள் ரூ.27.03 லட்சம் வழங்கல்
/
காக்கி உதவும் கரங்கள் ரூ.27.03 லட்சம் வழங்கல்
ADDED : அக் 05, 2024 04:02 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர் தசரதன்குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூ.27.03 லட்சம் உதவியாகவழங்கப்பட்டது.
தமிழகத்தில் 2011 பேட்ஜில் பணியில் சேர்ந்த போலீசார் அனைவரும் டெலி கிராம் ஆப் மூலம் ஒருங்கிணைந்து 5500 பேர் உறுப்பினர்களாக காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களது பேட்ஜ் போலீசார் உயிரிழப்பு ஏற்படும் போது அனைத்து போலீசாரும் இணைந்து நிதியுதவிஅளித்து வருகின்றனர்.
இதுவரை இந்த குழுவில் இருந்து 37 போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுஉள்ளது. 38வதாக அபிராமம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த தசரதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் 27.03 லட்சம் வழங்கப்பட்டது.
தசரதனின் தாய், தந்தை ஆகியோருக்கு எல்.ஐ.சி., யில் ரூ.12.50 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து பென்ஷன் கிடைக்க வழி செய்யப்பட்டது. தசரதன் சகோதரர்கள், சகோதரிக்கு தலா 2.50 லட்சம் வீதம் ரூ.12.50 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டது.
மீதம் 2.03 லட்சத்திற்கான காசோலையை அவர்களின் குடும்பத்தினரிடம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் வழங்கினார். தசரதனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.