/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மீது தாக்குதல் 3 பேர் கைது
/
ராமநாதபுரம் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மீது தாக்குதல் 3 பேர் கைது
ராமநாதபுரம் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மீது தாக்குதல் 3 பேர் கைது
ராமநாதபுரம் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மீது தாக்குதல் 3 பேர் கைது
ADDED : ஏப் 18, 2025 05:30 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு மாணவரின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் நகர் பகுதியில் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நாளில் மாணவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது.
அப்போது பள்ளி வளாகத்தில் நுழைந்த வெளி நபர்கள் அங்கு கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து மற்றொரு மாணவனின் தந்தையான பனைக்குளம் இளங்கண்ணன் 40, இவரின் உறவினர்களான ராமநாதபுரம் கொத்தனார் தெரு தினேஷ் 36, சத்திரக்குடி அருகே செவ்வூர் முனீஸ் 30, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நாளில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜூ உத்தரவின் பேரில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் ரவி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார்.