ADDED : டிச 31, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தாள் குப்பம் பகுதி ஐயப்ப பக்தர்கள் வேனில் ராமேஸ்வரம் சென்றனர்.
டிரைவர் செய்யது நசீத் 37, ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் அருகே வேன் சென்ற போது ரோட்டில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் மோதியதில் வேன் கவிழ்ந்தது.
இதில் மூன்று ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். சென்டர் மீடியன் பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் வெளியூர் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது தொடர்கிறது.