/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அருகே விவசாய நிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகள்
/
கடலாடி அருகே விவசாய நிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகள்
கடலாடி அருகே விவசாய நிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகள்
கடலாடி அருகே விவசாய நிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகள்
ADDED : நவ 19, 2024 06:27 AM

கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே விளை நிலத்தில் மூன்று நாட்டு வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கடலாடி அருகே பூலித்தேவன் நகர் பகுதியில் விளை நிலத்தில் மூன்று நாட்டு வெடி குண்டுகள் கிடப்பதை அந்த வழியாக கால்நடை மேய்ப்பதற்கு சென்ற விவசாயி பார்த்து கடலாடி போலீசாருக்கு தெரிவித்தார்.
அங்கு சென்ற போலீசார் வயல் வெளியில் தனித்தனியாக கிடந்த மூன்று நாட்டு வெடி குண்டுகளை பாதுகாப்பு உபகரணங்களுடன் மணல் நிரப்பிய பிளாஸ்டிக் வாளியில் பாதுகாப்பாக எடுத்து கடலாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
சதி செயலில் ஈடுபட யாரேனும் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் விட்டுச் சென்றனரா என விசாரிக்கின்றனர்.
பம்பர கயிற்றில் தயாரிக்கப்பட்ட இந்த நாட்டு வெடி குண்டுகளை இன்று(நவ.19) வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் செயல் இழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. கடலாடி போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரிக்கிறார்.

