/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் தண்டனை கைதி மீனவர்கள் 30 பேர் விடுதலை * பிரதமர் வலியுறுத்தல் எதிரொலி
/
இலங்கையில் தண்டனை கைதி மீனவர்கள் 30 பேர் விடுதலை * பிரதமர் வலியுறுத்தல் எதிரொலி
இலங்கையில் தண்டனை கைதி மீனவர்கள் 30 பேர் விடுதலை * பிரதமர் வலியுறுத்தல் எதிரொலி
இலங்கையில் தண்டனை கைதி மீனவர்கள் 30 பேர் விடுதலை * பிரதமர் வலியுறுத்தல் எதிரொலி
ADDED : மே 02, 2025 01:47 AM
ராமேஸ்வரம்:பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுர குமர திச நாயகேயிடம் வலியுறுத்தலின் எதிரொலியாக இலங்கையில் தண்டனை கைதியாக உள்ள தமிழக மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு அரசு விடுவித்தது.
ராமேஸ்வரம் முதல் நாகபட்டிணம் வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் பாரம்பரியமாக பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்து வருகின்றனர். சில நேரம் மீனவர்கள் மீன்களை தேடி எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடிப்பதால் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து படகுகளை சிறை பிடித்து விடுகின்றனர்.
2024 ஜூன் 15 முதல் 2025 ஏப்.,15 வரை மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்துள்ளனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 30 மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
ஏப்., 4ல் இலங்கை சென்ற பிரதமர் மோடி தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் அனுர குமர திச நாயகேவிடம் வலியுறுத்தினார். அதன்படி அந்நாட்டு சிறைகளில் உள்ள 30 மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை அரசு விடுவித்தது. இவர்கள் கொழும்பு அருகே மெரிகானா முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களுக்குப் பிறகு விமான மூலம் சென்னை வரவுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்ட மீனவர்கள். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.