/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.15 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்

ADDED : நவ 19, 2024 06:24 AM
ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.15 கோடி தங்கக் கட்டிகளை ராமேஸ்வரம் அருகே மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்து நடுக்கடலில் நாட்டுப்படகில் காத்திருந்த ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளையை சேர்ந்த இருவரிடம் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் நேற்று அதிகாலை வேதாளை கடற்கரைக்கு வந்தனர். பின் அங்கிருந்து டூவீலரில் தயாராக இருந்த கடத்தல்காரர்கள் இருவரிடம் தங்கக் கட்டிகளை ஒப்படைத்தனர். தங்ககட்டிகளுடன் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் கடத்தல்காரர்கள் சென்றனர்.
இதையறிந்த திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். கடத்தல்காரர்களிடம் இருந்த ரூ. 3.15 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் மண்டபம் பகுதியை சேர்ந்த நாசர், செய்யது இபுராகிம் என தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்து திருச்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். நடுக்கடலில் தங்கத்தை வாங்கி இவர்களிடம் ஒப்படைத்தவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.