/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா விற்ற கணவன் - மனைவியுடன் 4 பேர் கைது
/
கஞ்சா விற்ற கணவன் - மனைவியுடன் 4 பேர் கைது
ADDED : செப் 22, 2024 03:55 AM
உச்சிப்புளி : ராமநாதபுரம் அருகே நாகாச்சி சுடுகாட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட 4 பேரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.
உச்சிப்புளி எஸ்.ஐ., பட்டுராஜா தலைமையிலான போலீசார் நாகாச்சி சுடுகாட்டுப்பகுதியில் சென்ற போது கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த துத்திவலசை பொன்னையா மகன் கார்த்தி 22, என்பவரை கைது செய்தனர்.
அவரது வாக்குமூலம் அடிப்படையில் துத்திவலசை கஜேந்திரன் மகன் முகிலன் 19, கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய கொடுத்த துத்திவலசை ஆர்.எம்.எஸ்.,நகர் மாரிமுத்து 51, இவரது மனைவி ராஜேஸ்வரி 41, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சா, 1300 ரூபாய் பணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.